பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தில் பட்டாசுகள் வெடித்ததில் ஓடு வேய்ந்த கட்டடம் சேதமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி மனைவி அம்சாயி. இவர், தனது நிலத்தில் அரசு அனுமதி பெற்று வாணம், பட்டாசுகள் தயாரித்து வருகிறார்.இதற்கான ஓட்டு கட்டடத்தில் பட்டாசு தயாரிக்கும் கன்பவுடர், 500 வாணம், நாட்டு வெடிகள் இருப்பு உள்ள நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென உள்ளே இருந்த பட்டாசு வெடித்து, ஓடு வேய்ந்த கட்டடம் சேதமானது.நள்ளிரவில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.மேலிருப்பு வி.ஏ.ஓ., செந்தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், வருவாய்த் துறையினரும் விசாரித்து வருகின்றனர்.