கடலுார்; கடலுார் சங்கமம் ரோட்டரி சங்கம், போக்குவரத்து காவல் துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் சன் பிரைட் பிரகாஷ் தலைமை தாங்கினார்.செயலாளர் கார்த்திக், பொருளாளர் சூரியமூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் உதவி ஆளுனர் சந்திரசேகர், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், மண்டல செயலர் மதன்சந்த், சேர்மன் பூங்குன்றன், வெங்கடேஷ், ரவிச்சந்திரன், முன்னாள் தலைவர் விக்னேஸ்வரன், சண்முகம், இன்னர்வீல் சங்கம் உமா புருஷோத், ரோட்டரி சங்கத் தலைவர்கள் ஆறுமுகம், சுப்ரமணியன், ராமநாதன், செயலர் மதியழகன், சங்க உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரங்கராஜன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், செந்தில் பங்கேற்றனர்.