வேளச்சேரி - மழை நீர் வடிகாலில் விழுந்து, உயிருக்குப் போராடிய கன்றுக்குட்டியை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.வேளச்சேரி, அன்னை இந்திரா நகர், சாஸ்திரி தெருவில், மழை நீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. அதிலுள்ள, சில மூடிகள் திறந்துள்ளன.நேற்று முன்தினம் இரவு, வடிகாலுக்குள் இருந்து, கன்றுக்குட்டி கத்தும் சத்தம் கேட்டது. அங்கிருந்தவர்கள் அருகில் சென்று பார்த்த போது, திறந்திருந்த துளை வழியாக, கன்றுக்குட்டி தவறி விழுந்தது தெரிந்தது.வேளச்சேரி தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், கன்றுக்குட்டியை மீட்டனர். அது யாருடையது என தெரியவில்லை.