அரிதான முள்ளெலும்பு நழுவல் பாதிப்பு 2 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
06:40

சென்னை - மிக அரிதான முள்ளெலும்பு நழுவல் பாதிப்புக்கு உள்ளான இரண்டு வயது சிறுமிக்கு, காவேரி மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, மறுவாழ்வு அளித்துள்ளனர்.இதுகுறித்து, காவேரி மருத்துவமனையின் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை துறை தலைவர் பாலமுரளி கூறியதாவது:இரண்டு வயது குழந்தைக்கு, திடீரென முதுகு மற்றும் காலில் வலி உருவானது. அதனால், குழந்தையால், நகரவோ, நடக்கவோ முடியவில்லை. மேலும், கீழ்முதுகில் கட்டி போன்ற வீக்கம் உருவானது.பல மருத்துவமனைகளில் சிகிச்சை பலனளிக்காத நிலையில், சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்ததில், தண்டுவட மற்றும் நரம்பு அழுத்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, முள்ளெலும்பு மற்றொன்றின் மீது முழுமையாக சரிவடைந்திருக்கும், மிக அரிதான முள்ளெலும்பு நழுவல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையை தொடர்ந்து, இரண்டு மாதங்களில் குழந்தையால், நேராக நிமிர்ந்து நடக்கவும், வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபடவும் முடிந்தது.இதுபோன்ற பாதிப்பு, குழந்தைகளுக்கு ஏற்படுவது மிக அரிது. இத்தகைய கோளாறுக்கு, சிகிச்சை திட்டம், ஆவணப்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை விபரங்கள் என, எதுவுமில்லை. இந்த இளம் வயதில், முழு வளர்ச்சியடையாத மென்மையான எலும்புகள், சிகிச்சையளிப்பதில் முக்கியமான சவாலாக இருந்தது.குழந்தையின் தந்தை மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இதனால், அறுவை சிகிச்சைக்கு தேவையான பண வசதி அவரிடம் இல்லை. ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் வடக்கு, தமிழக அரசு, காவேரி மருத்துவமனை நிதியுதவி திட்டம் போன்றவை வாயிலாக, அறுவை சிகிச்சைக்கான தொகை சேகரிக்கப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.காவேரி மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன் செல்வராஜ் கூறியதாவது:உலகளவில், இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளான, மூன்று வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவேரி மருத்துவமனையில், இரண்டு வயது சிறுமிக்கு, மிக சிக்கலான அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்து உள்ளனர். குழந்தையை, எழுந்து நிற்கவும், நடக்கவும் வைத்த டாக்டர் பாலமுரளி மற்றும் அவரது குழுவினரை பாராட்டுகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X