சென்னை - 'ரிலையன்ஸ்' குழுமத்தின் அங்கமான, 'ரிலையன்ஸ் ஜியோமார்ட்' சார்பில், ஜன., 2021க்கான அதிரடி ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'ஜியோமார்ட் ஆப்' மூலம், 'ஆன்லைனில்' வாடிக்கையாளர்கள் செய்யும், 'ஆடர்கள்' அனைத்திற்கும் குறிப்பிட்ட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, மளிகைப் பொருட்கள், பிஸ்கட் வகைகள், பால், தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், சோப்புகள், ஷாம்புகள், ஆகியவை சலுகை விலையில், 'டோர் டெலிவரி' செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 'ரிலையன்ஸ் பிரஸ்' மற்றும் 'ஸ்மார்ட் பாயின்ட்' ஸ்டோர்களில் வாங்கும் பொருட்களுக்கும் பொருந்தும், இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.புல் பைசா வசூல் சேல்ஸ் 2021 என்ற பெயரில், இந்த மாதத்திற்கான சலுகை விலை விற்பனை, இம்மாதம், 23ல் துவங்கி, 26ம் தேதி வரை, நாட்டின் முக்கிய, 200 நகரங்களில் அமல்படுத்தப்படும் எனவும் அந்நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.விளம்பர விருப்பம்