சில வரி செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
07:07

மண்டலாபிஷேகம் நிறைவுகடம்பத்துார் : கடம்பத்துார், பெரிய தெரு, அபிதகுஜாம்பாள் சமேத மல்லிகார்ஜூனர் சிவன் கோவிலில், கடந்த டிச., 4ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, தினமும் மண்டலாபிஷேக விழா நடந்து வந்தது.இந்நிலையில், நேற்று மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. நேற்று காலை, 48வது நாள் மண்டல பூஜையும், 108 சங்காபிஷேகமும் நடந்தன.அத்துடன், அய்யப்பன், சீரடி சாய்பாபா சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட கும்பாபிஷேகமும் நடந்தது.திருத்தணி: திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில், கிருஷ்ணர் கோவில் கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டு, கடந்த மாதம், 11ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின், தினமும், மண்டலாபிஷேக விழா நடந்து வந்தது.இந்நிலையில், நேற்று மண்டலாபிஷேகம் நிறைவு விழா, கோவில் வளாகத்தில் நடந்தது. ஒரு யாகசாலை, ஒன்பது கலசங்கள் வைத்து, சிறப்பு ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.அதை தொடர்ந்து பஜனை குழுவினரின், கச்சேரி நடந்தது.சலவை தொழிலாளர்கள் மனுதிருத்தணி: திருத்தணி சலவை தொழிலாளர் சங்கம் சார்பில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில், 2016ம் ஆண்டு, ஜனவரி 21ம் தேதி, கன்னிகாபுரம் ஊராட்சி, இருளர் காலனி அருகே, சலவை தொழிலாளர் மற்றும் இதர சமுதாயத்தினர் என, மொத்தம், 80 பயனாளிக்கு, மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது.ஆனால், இதுவரை பட்டாவை, கிராம கணக்கில் சேர்க்கவில்லை. இதனால், அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் பெற முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர்.எனவே, அரசு வழங்கிய பட்டா நிலத்தினை கிராம கணக்கில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்ற கோட்டாட்சியர் சத்யா, ஒரிரு நாளில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X