பட்டினப்பாக்கம், ஜன. 22-மந்தைவெளியில், இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம், 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாப்பூர், கென்னடி தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 55. அவர் நேற்று காலை, தன் உறவினரான வத்சலா, 60, என்பவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.மந்தைவெளி பஸ் நிலையம் அருகே சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர், தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த, 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.இதில், நிலை தடுமாறி கீழே விழந்த பெண்கள் இருவரும், சிறுகாயத்துடன் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.