காஞ்சிபுரம்; தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வருகை காரண மாக, காஞ்சிபுரத்தில், கட்சியினர் சீர்செய்த பொதுக்குளம், செடி, கொடி முளைத்து, புதர்மண்டி கிடக்கிறது.தமிழகம் முழுதும், 2016ல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'நமக்கு நாமே' என்ற பெயரில், சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தபோது, பொதுமக்கள், நெசவாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.அவரது வருகை காரணமாக, காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதி பொதுக்குளத்தை, தி.மு.க.,வினர் துார் வாரி, சுத்தம் செய்தனர். காஞ்சிபுரத்தில் நடைபயணமாக வந்த ஸ்டாலின், அந்த குளத்தை பார்வையிட்டு, கட்சியினரை பாராட்டினார்.நமக்கு நாமே திட்டம் முடிந்து, நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், அந்த பொதுக்குளத்தை, அதன்பின், கட்சியினர் கண்டுகொள்ளவே இல்லை. இதனால், செடி, கொடி வளர்ந்து, புதர்போல் உள்ளது என, அப்பகுதியினர் தெரிவித்தனர்.