பவானி: பவானியை அடுத்த, மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வரும், 28 முதல் வியாழன் தோறும் தேங்காய், நிலக்கடலை ஏலம் நடக்கிறது. புதன்கிழமை மாலை, 4:00 மணிக்குள், நிலக்கடலையை கொண்டு வர வேண்டும். தேங்காயை, வியாழன் காலை, 8:00 மணிக்குள் கொண்டு வர வேண்டும். விளை பொருளுக்கான தொகை, விவசாயியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். எனவே விவசாயிகள், தங்களது வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின், முகப்பு பக்கத்தின் நகலை வழங்க வேண்டும். விற்பனை கூடத்தில், மூன்று சேமிப்பு கிடங்குகள் உள்ளன. விளை பொருட்களை இருப்பு வைத்து, குறைந்த வட்டியில் பொருளீட்டு கடன் பெறலாம்.