ஈரோடு: கருங்கல்பாளையம் சந்தையில், 2.50 கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனையாகின. ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை, நேற்று நடந்தது. இதில், 10 ஆயிரம் ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 120 கன்றுகள்; 30 ஆயிரம் ரூபாய் முதல், 62 ஆயிரம் ரூபாய் வரை, 350 பசுக்கள்; 30 ஆயிரம் ரூபாய் முதல், 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 300 எருமைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநில வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்திருந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: நேற்றைய சந்தையில், 90 சதவீத மாடுகள், ?.?? கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகின. பருவமழை நிறைவு பெறுவதால், வரும் நாட்களில் மாடுகளின் வரத்து அதிகரிக்கும் என்ற எண்ணத்தால், விலை குறையும், என்ற எதிர்பார்ப்பு வியாபாரிகளிடம் உள்ளது. அதேநேரம் பருவமழை அதிகமாக பெய்ததால், பசும்புல் தட்டுப்பாடு வராது என்பதால், மாடுகளை விற்க, விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.