புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே, சிறுமியை கடத்திய வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். புன்செய்புளியம்பட்டியை அடுத்த விண்ணப்பள்ளியில், தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. கடலூர் மாவட்டம், மூலகுப்பம், நடுவீராம்பட்டு காலனியை சேர்ந்த, 17 வயது சிறுமி, வேலை செய்து வந்தார். மூலகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமியின் உறவினர் விஷ்வா, 20; இவர் கடந்த, 11ம் தேதி ஸ்பின்னிங் மில்லுக்கு சென்று, சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை, புன்செய்புளியம்பட்டி போலீசில் புகாரளித்தார். போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விஷ்வாவை நேற்று கைது செய்தனர். அதேசமயம் சிறுமியை, ஈரோட்டில் உள்ள தனியார் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.