பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த அண்ணா நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் ரவிவர்மன், 20; இவர், தர்மபுரியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். கடந்த, 13ல் இரவு, 8:00 மணிக்கு தன் வீட்டின் அருகே, சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத பைக் மோதியதில், படுகாயமடைந்தார். அவரை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய, தாய் ராதிகா புகாரின்படி, பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்ய வலியுறுத்தி, மாணவரின் சடலத்துடன் உறவினர்கள், பென்னாகரம் அம் பேத்கர் சிலை அருகே நேற்று மாலை, 6:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். தகவல்படி சம்பவ இடம் வந்த பென்னாகரம் டி.எஸ்.பி., சவுந்தர்ராஜன், பேச்சுவார்த்தை நடத்தி, விபத்து ஏற்படுத்தியவரை கண்டு பிடித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், கலைந்து சென்றனர்.