பாப்பிரெட்டிப்பட்டி: சாலையில் மது குடிப்பதை தட்டிக்கேட்ட வாலிபர்களை தாக்கிய, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ராமியணஹள்ளி அம்பேத்கர் காலனி குப்பை கொட்டும் தார்ச்சாலை அருகில், ??ல் மாலை, ஐந்து பேர் மது அருந்தியுள்ளனர். அந்த வழியாக வந்த இரு வாலிபர்கள், இதை தட்டிக் கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அக்கும்பல், வாலிபர்களை தாக்கினர். இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில், எட்டு பேர் காயமடைந்தனர். இது குறித்து காயமடைந்த சத்திரியன், 24, புகாரின்படி, கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகர், 31, அலெக்ஸ்பாண்டின், 23, ராமன், 24, ரஞ்சித், 23, மருதுபாண்டியன், 27, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராமு, 31, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.