பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடு போய் உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசியை சேர்ந்தவர் காமராஜ், 55, விவசாயி; இவர், கடந்த, 19ல், குடும்பத்தினருடன் ஜீவா நகரிலுள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். பின், 20ல், நள்ளிரவு, 12:45 மணிக்கு, மெணசியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, ஏழு பவுன் நகை மற்றும், 10 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இது குறித்து, காமராஜ் அளித்த புகாரின்படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.