அரசு பள்ளி மாணவர்களுக்கு பொம்மைகள் செய்ய பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
10:52

ஓசூர்: தளி, கெலமங்கலம் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு பொம்மலாட்ட நிகழ்ச்சி மற்றும் பொம்மைகள் செய்ய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.


தளி ஒன்றியம், சாலிவாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கெங்கதேவனப்பள்ளி அரசு துவக்கப்பள்ளி மற்றும் கெலமங்கலம் ஒன்றியம், ஜார்கலட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில், 'வித் யூ' கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், கடந்த மூன்று நாட்களாக பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாணவ, மாணவியருக்கு பொம்மலாட்ட பொம்மைகள் செய்ய, பயிற்சி அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் இருந்து வந்திருந்த ரமேஷ்குமார் என்பவர், பொம்மலாட்ட பொம்மைகள் செய்ய, மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்தார். பொம்மைகள் செய்ய, தேவையான துணி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், 'வித் யூ' கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன. தளி ஒன்றியம், பின்னமங்கலம் மற்றும் மாவனட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், கெலமங்கலம் ஒன்றியம், திப்பசந்திரம் ஊராட்சி துவக்கப் பள்ளியில், இன்று (ஜன., 21) முதல், 23 வரை, பொம்மலாட்ட நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்பு நடக்கிறது.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X