கரூர்: சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு பேரணியில், அமைச்சர் விஜயபாஸ்கர் புல்லட்டில் சென்றார். கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து, போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார். பேரணியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஹெல்மெட், முககவசம் அணிந்து, புல்லட்டில் சென்றார். அவருடன், 700க்கும் மேற்பட்ட மகளிர் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். தான்தோன்றிமலை, சுங்ககேட் பகுதி வழியாக பேரணி சென்று, கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. எம்.எல்.ஏ., கீதா, டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.