அரவக்குறிச்சி: பள்ளப்பட்டியை அடுத்த, இனுங்கனூர் பஞ்,. உட்பட்ட, மார்க்கம்பட்டி செல்லும் சாலையில், தலையாரிபட்டி பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, இருக்கைகள் உடைக்கப்பட்டுள்ளதால், மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். அப்பகுதியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராம மக்கள், வெளியூர் பஸ் பயணங்கள் மேற்கொள்ள, இந்த பஸ் நிறுத்தத்தையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இருக்கைகள் உடைக்கப்பட்டுள்ளது குறித்து, பல முறை புகார் தெரிவித்தும் பலனில்லை. நிழற்கூடத்தின் இருக்கைகளை சரி செய்ய வேண்டும்.