ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரில் காவிரி கூட்டுகுடிநீர் குழாய்கள் சரிவரபராமரிக்கப்படாமல் வால்வு வழியாக தினமும் குடிநீர் வீணாகிறது.
ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளுக்கு காவிரி கூட்டுகுடிநீர் குழாய்கள் வழியாக வழங்கப்படுகிறது. இதில் நகராட்சி 33 வார்டுகளுக்கு தினமும் 40லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் 30 லட்சம் லிட்டர் தான் கிடைக்கிறது. பற்றாக்குறை உள்ள நிலையில் காவேரி கூட்டுக்குடிநீர்குழாய்கள் சரிவர பராமரிக்கப்படாமல் குடிநீர் வீணாகிறது. குறிப்பாக புதிய பஸ் ஸ்டாண்டில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் குழாயில் வால்வு சேதமடைந்து குடிநீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது.
இதனைசெப்பனிட நகராட்சி, குடிநீர் வடிகால் நிர்வாகம் இணைந்து நடவடிக்கைஎடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.--