ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மழையால் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு ஆய்வு கூட்டம் நடந்தது.
சென்னை வேளாண்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் முன்னிலை வகித்தனர். இதில் ராமநாதபுரம் ஒன்றிய வாரியாக கிராமங்களில் பயிர் பாதுகாப்பு குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. விடுபடாமல் ஜன.,29க்குள் விரிவாக அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என வேளாண்துறை இயக்குனர் வலியுறுத்தியுள்ளார்.ராமநாதபுரம் சப்கலெக்டர் சுகபுத்ரா, வேளாண் இணை இயக்குனர் குணபாலன், துணை இயக்குனர் சேக் அப்துல்லா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி பங்கேற்றனர்.-----