ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பத்து ஊர்களுக்கு பாசனத் தண்ணீர் வழங்கும் பெரிய கண்மாய் துார்வாரப்படாமல், கருவேல மரங்கள், வாய்க்கால் மதகு சேதமடைந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்தும் நிரம்பவில்லை.ராமநாதபுரம் மாவட்டத்தில் கருங்குடியில் துவங்கி லாந்தை வரை 12 கி.மீ.,துாரத்திற்கு 200 ஏக்கர் பரப்பளவில் பெரிய கண்மாய் அமைந்து ள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படாமல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. மண்மேவி மேடாகியுள்ளன. வரத்து வாய்க்காமல் மதகுகள் பழுதாகியும், சேதமடைந்தும் வருகின்றன. மழைநீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை உள்ளது. கண்மாயை நம்பி 3500 ஏக்கர் வரை நன்செய்,புன்செய் சாகுபடி நடக்கிறது. குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
நவ., டிசம்பர் நல்லமழை, வழக்கத்திற்கு மாறாக ஜனவரியில் மழைபெய்தும் கண்மாய் நிரம்பவில்லை ஆகையால் பெரிய கண்மாயை துார்வாரவும், வாய்க்கால், மதகு பகுதியில் சேதத்தை செப்பனிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர் பெரியகண்மாய் நீரினை பயன்படுத்துவர் பாசன சங்கம் பாலசுந்தர மூர்த்தி கூறுகையில்,‛ கடந்த வாரம் தொடர் மழையால் பெரியகண்மாயின் நீர்மட்டம் உயர்ந்து தற்போது 6 அடி வரை தண்ணீர் உள்ளது. இது முதல்போக விவசாயத்திற்கு போதுமானது ஆகும். ஆனால் பிப்ரவரி இறுதியில் இரண்டாம் போகம் சாகுபடி செய்வது சிரமமாகும்.
ஆகையால் பற்றாக்குறையை போக்க வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். பல ஆண்டுகளாக துார்வாரி பராமரிக்கப்படாமல் உள்ளது. துார் வாரி பராமரித்தால் 10 அடி வரை தண்ணீர் தேக்கலாம். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் கூறியுள்ளோம்,'என்றார்.---------