திருவாடானை : திருவாடானையிலிருந்து திருவெற்றியூர்செல்லும் சாலையில் புதுப்பனையூர் அருகே தரைப்பாலத்தில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பாலம் வழியாக கள்ளிக்குடி, கொட்டகுடி, கடுக்கலுார் உள்ளிட்ட20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்கின்றனர்.தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதால் டூவீலர்களில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருவாடானையிலிருந்து திருவெற்றியூர்கோயிலுக்கு ஆட்டோவில் செல்பவர்களும்சிரமம் அடைந்துள்ளனர்.சூச்சனி, நகரிகாத்தான் தரைப்பாலங்களில் தண்ணீர் செல்வது குறைந்து வருகிறது.ஆனால் ஆர்.எஸ்.மங்கலம் சனவெளி ஆற்றிலிருந்து தண்ணீர் வரத்துஅதிகரித்து வருவதால் திருவெற்றியூர் தரைப்பாலத்தில் தண்ணீர் வரத்து குறையவில்லை.