ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை அடுத்த, அய்யனேரி அரசு உயர்நிலை பள்ளியில், சமூக நலத்துறை சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் ஜான் வில்சன் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் டி.கிரிஜா சிறப்புரை ஆற்றினார்.பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பெண் குழந்தைகள் மீதான சமூக அவலங்கள் மற்றும் அவற்றின் தடுப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் குமரவேல், கிராம சுகாதார செவிலியர், காவல் துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.