பள்ளி வளாகங்களில் தூய்மைப்படுத்தும் பணி | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
பள்ளி வளாகங்களில் தூய்மைப்படுத்தும் பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
23:01

ஊத்துக்கோட்டை : ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை துாய்மைப்படுத்தும் பணி துவக்கப்பட்டு உள்ளது.



ஊத்துக்கோட்டையில், பேரூராட்சி அலுவலகம் எதிரே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட இந்த பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி கற்கின்றனர்.தற்போது, தொற்று குறைந்துள்ள நிலையில், கல்லுாரிகள் திறக்கப்பட்டு, இறுதியாண்டு மாணவ - மாணவியர் கல்லுாரிக்கு வர துவங்கி உள்ளனர். பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும் மாணவ - மாணவியர் பள்ளிக்கு வருகின்றனர்.



அரசு வழங்கிய நெறிமுறைகள்படி மாணவர்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்கின்றனர். மற்ற வகுப்புகளும் விரைவில் துவங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ஊத்துக் கோட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பை மற்றும் மரக்கழிவுகளை பள்ளி நிர்வாகம் அகற்றியும், வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X