மீஞ்சூர் : துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
மீஞ்சூரை அடுத்த, காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்தினை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு, மீனவ மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திட்டம் தொடர்பாக, நேற்று நடைபெற இருந்த கருத்துகேட்பு கூட்டமும் ரத்து செய்யப்பட்டிருந்தது.மேற்கண்ட துறைமுக விரிவாக்க திட்டத்தினை கைவிடக்கோரி, நேற்று, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மீஞ்சூர் பஜார் பகுதியில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல்வேறு அமைப்பினர் மீனவ மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.நேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தி.மு.க., சுற்றுச்சூழல் அணியின் செயலர் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் அக்கட்சிகளின் நிர்வாகிகள் அடுத்தடுத்து காட்டுப்பள்ளி, பழவேற்காடு, செங்கழனிர்மேடு ஆகிய மீனவ பகுதிகளை பார்வையிட்டு மீனவ மக்களை சந்தித்து பேசினர்.