கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 பயிலும், மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., விஜயகுமார் தலைமை வகித்தார்.பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் ரவி, கும்மிடிப்பூண்டி சேர்மன் சிவகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, மாதர்பாக்கம், எளாவூர், ஆரம்பாக்கம் என, 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 பயிலும், 1,906 மாணவ - மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.