கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில், நேர காப்பாளர் அறை அருகே, பயணியர் அமரக்கூடிய நிழற்குடை, மாலை நேரத்திற்கு பின், 'குடி'மையமாக மாறி விடுகிறது.
அங்குள்ள சிமென்ட் பெஞ்சுகளில் அமர்ந்தபடி, அருகில் உள்ள உணவகங்களில், 'சைட் டிஷ்' ஆர்டர் செய்து, தினசரி சரக்கு அடிப்பதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இதனால், மாலை நேரத்திற்கு பின், அந்த நிழற்குடையை பயணியர் பயன்படுத்த முடிவதில்லை. கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம், மாலை நேரத்திற்கு பின், 'குடி'மையமாக மாறுவதால், பயணியரும், பொது மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதற்கு, தீர்வு காணும் விதமாக, கும்மிடிப்பூண்டி போலீசார் நடவடிக்கை எடுத்து, இரவு நேரத்தில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.