வில்லிவாக்கம் : சொத்து பிரச்னையில், மாமனாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகனை, போலீசார் கைது செய்தனர்.
வில்லிவாக்கம், சிட்கோ நகர், 46வது தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 82. இவர், தன் மகள் ஹேமாமாலினி, மருமகன் குமார், 52, மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்தார்.ஆற்காடு, வரகரபுதுாரில், ஜெகநாதனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இதை, தன் பெயருக்கு மாற்றித் தருமாறு, மருமகன் குமார் அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு, இருவருக்கும் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த குமார், காய்கறி வெட்டும் கத்தியால், ஜெகநாதனை குத்தி கொலை செய்தார். ஹேமாமாலினி புகாரின்படி, வில்லிவாக்கம் போலீசார் நேற்று குமாரை கைது செய்தனர்.சொத்துக்காக, மருமகனே மாமனாரை கொன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.