சென்னை : சென்னை, கன்னிமரா நுாலகத்தில், நிரந்தரப் புத்தகக் காட்சி நேற்று துவங்கியது.
சென்னை, எழும்பூரில் உள்ள கன்னிமரா நுாலகம் மிகப்பழமையானது. இங்கு, ஆயிரக்கணக்கான வாசகர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.இதை ஒட்டி, வலதுபுறம் உள்ள, 4,000 சதுரடி பரப்பளவில் அரங்கு உள்ளது. இதில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான 'பபாசி'யின் சார்பில், நிரந்தரப் புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு, தினமும் 10 சதவீத தள்ளுபடியில் புத்தக விற்பனை செய்யப்படுகிறது.இந்த நிரந்தரப் புத்தகக்கண்காட்சியை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று துவக்கி வைத்தார்.