சென்னை : குடியரசு தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான குரல் வளப் போட்டியை, சென்னை புறநகர் ஜி.எஸ்.டி., கமிஷனர் அலுவலகம் நடத்துகிறது.
இதுகுறித்து, அதன் கூடுதல் கமிஷனர் ஜெயபாலசுந்தரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாட்டின், 72வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, சென்னை புறநகர் ஜி.எஸ்.டி., அலுவலகம் சார்பில், குரல் வளப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில், 12 வயது முதல், 15 வயது வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்.
போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள், மகாகவி பாரதியின், 'பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்' என்ற பாடலை பாடி, 'யுடியூப்'பில் பதிவேற்றம் செய்து, அதன் லிங்கை, singingforrepublicday2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, நாளை இரவு, 12:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.இசைக் கருவிகள் போன்ற, பின்னணி இசை பயன்படுத்தக் கூடாது. இந்த போட்டி குறித்த மேலும் விபரங்களை, 94441 39501 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.