புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.புதுச்சேரியில் நேற்று 3342 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 12 பேர், காரைக்கால் 1; மாகேவில் 8 ; ஏனாமில் ஒருவர் உட்பட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை38 ஆயிரத்து 794 ஆனது.மருத்துவ மனைகளில் 117 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 177 பேர் உட்பட 294 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இறப்பு இல்லை. கொரோனா தொற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக நீடிக்கிறது. இறப்பு விகிதம் 1.66 ஆகவும், குணமானவர்களின் எண்ணிக்கை 97.58 சதவீதமாகவும் உள்ளது.இதனிடையே நேற்று 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், வீடு திரும்பியோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது. இது வரை 5 லட்சத்து 50 ஆயிரத்து 551 பேருக்கு பரிசோதனை செய்ததில் 5 லட்சத்து 7 ஆயிரத்து 218 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.