வில்லியனுார்; வில்லியனுார் பைபாஸ் சிக்னல் பகுதியில் சாலைகளின் வழிகாட்டி ஊர் பெயர் பலகை இல்லாததால் வெளியூர் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.வில்லியனுார் போக்குவரத்து போலீசார் சார்பில் பைபாஸ் சாலை கூடப்பாக்கம் நான்கு ரோடு சந்திப்பு பகுதி, அண்ணா சிலை மற்றும் கோட்டைமேடு நான்கு ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைத்துள்ளனர்.வில்லியனுாரில் சிக்னல் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி பஸ்கள் மற்றும் பொதுக்களின் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சங்கமித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.இந்த பகுதிகளில் சிக்னல் அமைத்த பிறகு நெரிசல் குறைக்கப்பட்டு வாகன விபத்துகளும் தடுக்கப்பட்டுள்ளன. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வரும் வாகன ஓட்டிகளுக்கு எந்த சாலை எங்கு செல்கி றது என தெரியாமல் சிக்னல் பகுதியில் நிற்கின்றனர்.வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சிக்னல் பகுதியில் பிரிந்து செல்லும் சாலைகளின் வழிதட ஊர்களின் பெயர் பலகை அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.