காரைக்கால்: காரைக்காலில் சாலை பாதுகாப்பை முன்னிட்டு நான்கு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு நான்கு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை எஸ்.பி., வீரவல்லபன் கொடியசைத்து துவக்கி வைத்தார். எஸ்.பி., ரகு நாயகம், போக்குவரத்து துறை அதிகாரி கலியபெருமாள் முன்னிலை வகித்தார். கலெக்டர் அலுவலகத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி சென்றனர். துணை மாவட்ட ஆட்சியர் (பேரிடர்) பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் மரிகிரிஸ்டின்பால், போக்குவரத்துறை அதிகாரிகள் கல்விமாறன், குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.