காரைக்கால்: காரைக்காலில் கொரோனா நோய் தொற்று காரணமாக சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் துவக்கப்பட்டது.காரைக்கால் மாதாகோவில் வீதியில் கைலாசநாதர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவில்கும்பாபிஷேகம் முடிந்து 13 ஆண்டுகள் முடிந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ராஜகோபுரம் விமான பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. கொரோனா நோய் தொற்று காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது.தற்போது ஏற்பாடுகள் துவங்கிய நிலையில் சாரம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.