புதுச்சேரி: ஆச்சாரியா கலை, அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் வங்கி, காப்பீடு, சுயதொழில் முனைவோர் என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கம் நடந்தது.முதல் நாள் துவக்க விழாவிற்கு ஆச்சாரியா கல்விக் குழும மேலாண் இயக்குனர் அரவிந்தன், முதல்வர் நிர்மல்குமார் தலைமை தாங்கினர். கல்விக் குழும தலைமை இயக்க அதிகாரி ராமச்சந்திரன் பேசினார். இரண்டாம் நாள் அமர்வில் கணினி அறிவியல் துறைத் தலைவர் ரமேஷ்பாபு பேசினார்.கருத்தரங்கில் ஆக்சிக்ஸ் வங்கியின் இயக்க மேலாளர் நிதிமேரி சந்திரன், எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் பிரிவு மேலாளர் லட்சுமணன், ரிபல் அப்பரேல்ஸ் நிறுவன தாளாளர் ஜோதி ஷங்கர் பங்கேற்றனர்.பொருளாதாரத்தில் வங்கிகளின் பங்களிப்பு, வாழ்நாள் காப்பீட்டு திட்ட பயன்கள், சுய தொழில் முனைவதால் கிடைக்கும் பயன்கள் குறித்து விளக்கினர். வணிகவியல் துறை மாணவர்களுடன் கலந்துரையாடினர். ஏற்பாடுகளை வணிக வியல் பேராசிரியர்கள் மதிவதனன், சதீஷ்கதன், ரமேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.