கோவை:வாக்காளர்கள் புதிய அடையாள அட்டையை, 'ஆன்லைன்' மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை, வரும் 25ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதன் உண்மைத்தன்மை, ஆய்வு செய்யப்பட்டு புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படுவது வழக்கம்.புதிதாக விண்ணப்பித்தவர்கள், தேசிய வாக்காளர் தினமான வரும் 25ம் தேதி வாக்காளர் அடையாள அட்டையை, ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து, மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர் கூறுகையில், 'இப்புதிய நடைமுறைப்படி, கோவையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபின், விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்கள் மட்டுமே, புதிய வாக்காளர் அடையாள அட்டையை முதல்கட்டமாக பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.அதற்கு முன்பு விண்ணப்பித்தவர்களுக்கும், விரைவில் இது போல் செயல்படுத்த பணிகள் நடக்கின்றன. பெயர் சேர்க்க அளிக்கப்பட்ட, போன் எண், பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பயன்படுத்தி, அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்' என்றார்.