சரவணம்பட்டி:காந்திமாநகரில் கணவரின் ஆட்கள், தனது 6 மாத குழந்தையை கடத்திச்சென்றதாக, சரவணம்பட்டி போலீசில் பெண் புகார் தெரிவித்துள்ளார்.கணபதி, காந்திமாநகர் போலீஸ் குவார்ட்டர்சை சேர்ந்தவர் யுரேகா,26. இவரது ஆறு மாத கை குழந்தையை, மூன்று பேர் காரில் வந்து மிரட்டி, பறித்துச் சென்றுள்ளனர். தாய் வீட்டில் உள்ள இவர், தனது கணவர் துாண்டுதலின்பேரில் குழந்தை கடத்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.