விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.விழுப்புரம் அடுத்த மோட்சகுளத்தை சேர்ந்தவர் சுரேஷ், 28; இவர், நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அவரை, டாக்டர்கள் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதனால், ஆத்திரமடைந்த சுரேஷின் உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த துரை, பிரகாஷ், தாரகமூர்த்தி உட்பட 30 பேர் சிறுவந்தாடு பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.