கோவை:தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கம் சார்பில், 'விவாத மேடை' என்ற, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான 365 நாள் ஆன்லைன் வகுப்பு நடக்கிறது. நேற்றுடன், 300 நாட்கள் நிறைவடைந்தது.ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், புதிய வகை விளையாட்டு, விதிமுறைகள் என, பல்வேறு தகவல் பரிமாறிக்கொண்டனர்.நேற்று, 300வது நாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும், மரங்கன்று நடப்பட்டது.