விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.விக்கிரவாண்டி நகர பா.ஜ., சார்பில் பஸ் நிலையத்தில் நடந்த முகாமிற்கு முன்னாள் பேரூராட்சி சேர்மன் குமாரசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் உறுப்பினர் முகாமை துவக்கி வைத்து பேசினார்.விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட 500 பேர் தங்களை பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டையை முன்னாள் சேர்மன் குமாரசாமி வழங்கினார். மாவட்ட நிர்வாகிகள் விவசாய அணி பொருளாளர் அசோக்குமார், பிறபடுத்தப்பட்டோர் அணி செயலாளர் ரவி, ஒன்றிய தலைவர் அங்காளன், நிர்வாகிகள் பெருமாள் ரவி, புஷ்பராஜ், வேணுகோபால், ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்