சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சாராயம் விற்றபெண் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து 110 லிட்டர் கள்ளச் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சவுகத்தலி சங்கராபுரம் வட்டம் அரசம்பட்டு கிராமத்தில் கள்ளச் சாராய சோதனை மேற்கொண்டார்.அப்போது சாராயம் விற்ற அதே ஊரை சேர்ந்த ராஜூ மனைவி சின்னப்பிள்ளையை, 42. கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் கள்ளச் சாராயத்தை கைபற்றி விசாரித்து வருகின்றனர்.