திண்டிவனம்: இரு குழந்தைகளின் தாய் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஒலக்கூர் அடுத்த கீழ்ஆதனுார் காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன், 33; பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோடீஸ்வரி,25; இவர்களுக்கு ஜெகதீஷ்,8; ரோகித், 3; ஆகிய இரு மகன்கள்உள்ளனர்.இந்நிலையில் நேற்று வழக்கம் போல் ஜானகிராமன் வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகள் வெளியே விளையாட சென்றுவிட்டனர்.வீட்டில் தனியாக இருந்த கோடீஸ்வரி, மாலை 4:00 மணி அளவில் திடீரென துாக்கில் தொங்கியுள்ளார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.