கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே 42 பேரிடம் ரூ.63 லட்சம் கடனாக பெற்று குடும்பத்தினருடன் தலைமறைவானவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.இது குறித்து எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார்,50; இவர், நீலமங்கலம் கிராமத்தில் மளிகை கடை மற்றும் பால் ஸ்டோர் நடத்தி வந்தார். முத்துக்குமார் தான் நடத்தி வரும் மளிகை கடையை விஸ்தரிப்பு செய்யவும்,பால் பண்ணை அமைப்பதற்கும் 42 பேரிடம் ரூ.63 லட்சம் வரை ஒவ்வொருவருக்கும் தெரியாமல் கடன் வாங்கியிருந்தார். கடன் தொகைக்கான வட்டியையும் யாருக்கும் தராமல் இருந்தார். பல நாட்களாக பணம் தராமல் அலைக்கழித்த நிலையில், கடந்த 20ம் தேதி இரவு முத்துக்குமார் தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார்இதனையடுத்து அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, முத்துக்குமாரை தேடி கண்டுபிடித்து அவரிடமிருந்து பணத்தை மீட்டு தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள் தனி தனியாக புகார் மனு அளித்துள்ளனர்.