ராமேஸ்வரம்:ஜன., 18ல், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினம் கடற்கரையில் இருந்து, மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகை கடலில் மூழ்கடித்தது.பின், மீனவர்களை இரும்பு தடியால் அடித்து கொலை செய்து, கடலில் மிதந்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் நாடகமாடினர்.
இந்நிலையில், நேற்று யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில், மீனவர்களது உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடந்தது. இதற்கு, தமிழக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, உடல்களை வாங்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.