நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு விவசாய நிலத்திற்குச் செல்லும் வழியில் சாலை போடும் பணி மந்தமாக நடைபெறுவதால் விவசாயிகள் அவதியடைந்துவருகின்றனர்.நடுவீரப்பட்டு - பாலுார் செல்லும் வழியில் செவத்த ஐயனார் கோவில் எதிரே 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்துவருகின்றனர்.விவசாயிகள் நிலத்திற்குச் செல்லும் வழியில் சாலை போடுவதற்காக கடந்த மாதம் ஜல்லிகள் கொட்டப்பட்டன. ஆனால், இதுவரை பணி துவங்கப்படவில்லை.இதனால், விவசாயிகள் தங்களது நிலத்திற்கு விளை பொருட்கள் மற்றும் இடு பொருட்களைக் கொண்டு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.மேலும், நெல் அறுவடை செய்ய இயந்திரத்தை கொண்டு செல்ல முடியாமல்தவிக்கின்றனர்.சாலை போடும் பணியைத் துவங்கி துரிதமாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.