வேப்பூர்: நல்லுாரில் அ.தி.மு.க., சார்பில், சட்டசபை தேர்தல் தொடர்பான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஆவின் சேர்மன் பச்சமுத்து தலைமை தாங்கினார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், ஜெ., பேரவை மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மருத்துவரணி மாவட்ட பொருளாளர் சம்பத் வரவேற்றார்.கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் அருண்மொழித்தேவன் பேசுகையில், 'வரும் சட்டசபை தேர்தலுக்கான பூத் கமிட்டியில் உள்ளவர்கள் களப்பணியில் தீவிரமாக செயல்பட்டு, அதிக ஓட்டு வித்தியாசத்தில் முதல்வர் பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க வேண்டும்' என்றார்.கூட்டுறவு வங்கி தலைவர் டென்சிங், நிர்வாகிகள் முருகன், சுப்ரமணியன், கவுன்சிலர் மனோகரன், மாவட்ட பிரதிநிதி அருள்தாஸ், வழக்கறிஞர் குமரேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.