காட்டுமன்னார்கோவில்: மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் காட்டுமன்னார்கோவில் அடுத்த தில்லைநாயகபுரத்தில் முதல்வரின் மினி கிளினிக் திறப்பு விழா ஊராட்சி அலுவலக கட்டடத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, மருத்துவத்துறை குமராட்சி வட்டார அலுவலர் டாக்டர் குணபாலன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் விஜய் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் முருகுமாறன் எம்.எல்.ஏ., மினி கிளினிக்கை திறந்து வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். டாக்டர் குணபாலன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க., நிர்வாகிகள் அருள்பிரகாசம், சாமிநாத சிவப்பிரகாசம், செந்தில்குமார், பாலசுப்ரமணியன், கோவிந்தராஜ், அன்பழகன், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.சுகாதார ஆய்வாளர் செல்வநாதன் நன்றி கூறினார்.