கடலுார்: வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம்-2018 மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2020 குறித்து வழக்கறிஞர்களுக்கான பயிலரங்கம் கடலுாரில் இன்று நடக்கிறது.இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் சார்பில், கடலுார், புதுநகர் காவல் நிலையம் எதிரே உள்ள ஜி.ஆர். ஓட்டலில் இன்று 23ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.மாவட்ட நீதிபதி செம்மல் பயிலரங்கை துவக்கி வைக்கிறார். இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மைய இயக்குனர் ரமேஷ்நாதன் கருத்துரை வழங்குகிறார். விழுப்புரம் வழக்கறிஞர் சேரலாதன், கடலுார் வழக்கறிஞர் திருமேனி வாழ்த்திப் பேசுகின்றனர்.வழக்கறிஞர்கள் மோகன், ரகுமான் ெஷரீப், டில்லி வழக்கறிஞர் ராகுல்சிங், சென்னை கோர்ட் வழக்கறிஞர் செல்வி ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.