கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 2020-2021ம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.கிருஷ்ணசாமி கல்வி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் ராஜேந்திரன், செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினர். முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் 'ஜெடக்' நிறுவனர் கார்த்திக் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.முகாமில் சென்னை டி.வி.எஸ்., பிரேக் இண்டியா பிரைவேட் லிமிடெட் குழுமத்தின் மனிதவள மேலாளர்கள், இயந்திரவியல் இறுதியாண்டு மாணவர்களிடம் முதல் கட்ட நேர்காணல் நடத்தினர். 68 மாணவர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு பயிற்சித் துறை அலுவலர் தணிகைவேல் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.