ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் பாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த பாண்டியன், ராமநாதபுரத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் 2018 ல் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இவர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்துள்ளதாக மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதனையடுத்து பாண்டியன் அவராகவே வேலையிலிருந்து நின்று விட்டார்.
மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் பாண்டியனின் பத்தாம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உண்மை தன்மை அறிய சென்னை அரசு தேர்வுகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் போலி சான்றிதழ் தயாரித்துஆசிரியர் பணியில் சேர்ந்தது தெரிந்தது. இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி புகாரில் பாண்டியன் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.