பொள்ளாச்சியில் கடன் மேளா முகாமில் 480 பேர் பங்கேற்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பொள்ளாச்சியில் கடன் மேளா முகாமில் 480 பேர் பங்கேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜன
2021
04:56

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், மத்திய, மாநில அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் மற்றும் கடன் மேளா நடந்தது.குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கோவை மாவட்ட தொழில் மையம்,பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை, கோகோமென்ஸ், பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில், கடன் மேளா, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை அலுவலக வளாகத்தில் நடந்தது.சுய தொழில் துவங்க மாநில, மத்திய அரசுகளின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்து விளக்க கூட்டம், கடன் மேளாவாகவும் நடத்தப்பட்டது.மாவட்ட தொழில் மையம் உதவி பொறியாளர் திலகவதி வரவேற்றார். மாவட்ட தொழில் மைய அதிகாரி சண்முகசிவாதிட்டம் குறித்து விளக்கி பேசினார்.பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன், 'கோகோமென்' தலைவர் கவுதமன், பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்க தலைவர் சக்திவேல் மற்றும் வங்கி மேலாளர்கள் பேசினர். தொழில் மையம் புள்ளி விவரஆய்வாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.கடன் மேளாவில்,பத்து பேருக்கு மொத்தம், 70 லட்சம் மதிப்பிலான கடன் வழங்குவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.அதில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து, 480 பேர் முகாமில் பங்கேற்றனர். குறைந்த பட்சம், 2 லட்சம் முதல், 50 லட்சம் வரை கடன் கேட்டு விண்ணப்பித்தனர். மானியத்துடன் கடன் பெறும் முறைகள் குறித்து சந்தேகங்களைகேட்டறிந்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X